அவர் TVK, நான் AVK; 'விஜய்க்கும் எனக்கும் தான் போட்டியே'; புதிய கட்சியை அறிவித்த பவர் ஸ்டார் சீனிவாசன்..! - Seithipunal
Seithipunal


'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் தொழில் முறையில் அக்குபஞ்சர் மருத்துவர்.

கடந்த 2018 டிசம்பர் மாதம் இவர் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, ₹1000 கோடி கடன் வாங்கி தருவதாகக் கூறி ₹5 கோடி வரை ஏமாற்றிய மோசடி வழக்கில் டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவால் (EOW) கைது செய்யப்பட்டார்.

இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், 2018 முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு,தோல்வி அடைந்தார். தொடர்ந்து பாஜக, இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில், தான் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்து இருந்த நிலையில், தற்போது தனது கட்சிப் பெயரை அறிவித்துள்ளார். இதனையடுத்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், “''என் கட்சியின் பெயர் அண்ணா வளர்ச்சி கழகம் (AVK). எனக்குப் போட்டியே விஜய்தான். அவர் TVK, நான் AVK.

AVK கட்சியை விரைவில் ஆரம்பிக்கப் போகிறேன். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டிய பணியெல்லாம் இருப்பதால் அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். என் ஆதரவு திமுகவுக்குத்தான்''. என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The only competition is between Vijay and me declares Power Star Srinivasan announcing his new political party


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->