நெறியாளர் மண்டையை உடைத்த திமுகவினர்... ரத்தம் சொட்ட சொட்ட... திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு... அண்ணாமலை கடும் கண்டனம்!
BJP Annamalai Condemn to DMK MK Stalin
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன செய்தியில், "இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK MK Stalin