'ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூட தெரியாது'; ட்ரம்ப் பகீர் தகவல்..!
Trump states in an interview that it is unknown whether Irans new Supreme Leader is even alive
ஈரான் உடனான போரை 05 நாட்களுக்கு தற்காலிகமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். தற்போது ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று தனக்கு தெரியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஈரான் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலனுக்கிரத்தோடு, சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பி வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பாத்துள்ளன.
இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து ஈரான் மீது 05 நாட்களுக்கு தற்காலிகமாக ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது;
''நாங்கள் ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதில் உடன்பாடு காணக்கூடிய பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஈரானின் மரியாதைக்குரிய மூத்த தலைவர்களுடன் அமெரிக்கா பேசியுள்ளது. இரு தரப்புமே ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறோம்.
இரு தரப்பினரும் பெரும்பாலும் இன்று தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவரிடமிருந்து நான் எதையும் கேள்விப்படவில்லை; அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது.
ஈரான் உடனான இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் மகிழ்ச்சியடையும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது ஈரான் மற்றும் அந்தப் பிராந்தியம் முழுமைக்கும் ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். நாங்கள் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால், அவர்கள் 2 வாரங்களுக்குள் அணு ஆயுதத்தை உருவாக்கி இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியிருப்பார்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Trump states in an interview that it is unknown whether Irans new Supreme Leader is even alive