தலைவர் 173 படத்தில் ரஜினிக்காக 83 கெட்டப்..? சிபி சக்கரவர்த்தி நியூ அப்டேட்..!
83 Looks for Rajini in the Film Thalaivar 173
சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 173' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் சிபி, 'தாய் கிழவி' பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசிய போது, "ஏப்ரல் மாத மத்தியில் படப்பிடிப்பு துவங்கும்" என அறிவித்தார்.
அப்போது இம்மாத தொடக்கத்தில், படத்தின் கதை எழுதும் பணிகள் எல்லாம் நிறைவடைந்து, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.அப்போது ஸ்க்ரிப்ட் புக்கை ராஜ்கமல் மகேந்திரனிடம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் தோற்றம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் ரஜினியின் தோற்றத்துக்காக 83 வித்தியாசமான தோற்றங்களை சிபி வடிவமைத்ததாகவும், அதிலிருந்து தனித்துவமான மூன்று தோற்றங்களை முடிவு செய்து அதனை ரஜினியிடம் காட்ட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து சிறந்த ஒன்றை ரஜினியே தேர்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் குறித்து ’வித் லவ்’ பட விழாவில் பேசிய சிபி சக்கரவர்த்தி கூறியதாவது;
"நான் 'தலைவர் 173' படம் பண்றேன்னு அறிவிச்சதும் பலர் வாழ்த்தினாங்க. சிலர் இவன் பண்றானானு பயந்தாங்க. தலைவர் ஃபேனா நான் சொல்றேன், இது ரசிகர்களும் குடும்பங்களும் தியேட்டர்விட்டு வெளிய வர்றப்போ திருப்தியோட வர்ற படமா இருக்கும். இது என் Promise!" என்று குறிப்பிட்டார். இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
English Summary
83 Looks for Rajini in the Film Thalaivar 173