“தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
admk eps alliance seat sharing announce 2026
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
இத்தருணத்தில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும். களம் நமதே! வெற்றியும் நமதே! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
admk eps alliance seat sharing announce 2026