கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து; 80 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!
Fears that 80 soldiers may have died in a military plane crash in Colombia
கொலம்பியாவின் தெற்கு பகுதியில் நேற்று இராணுவ போக்குவரத்து விமான விபத்துக்கு உள்ளாகியது. இதில் பயணித்த 125 பேரில் , சுமார் 80க்கும் மேற்பட்ட படையினர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு படைப்பிரிவுகளை ஏற்றிச் சென்ற C-130 Hercules வகை விமானம், எக்குவடோர் எல்லைக்கு அருகிலுள்ள Puerto Leguizamo பகுதியில் புறப்படும் நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்து குறித்து அந்நாட்டின் அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்ட வீடியோ காட்சிகளில், மரங்கள் நிறைந்த பகுதில் விமானத்தின் சேதமடைந்த பகுதி தீப்பற்றி எரிவது காணப்படுகிறது.
குறித்த விமானங்கள் பொதுவாக சுமார் 100 படையினரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும்.இந்த விமான விபத்து நடந்த இடத்திற்கு இராணுவத்தினர் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர்.
ஆனாலும், விமான விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் தெரியவைளை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதோடு, ''இது நாட்டிற்கு மிகுந்த துயரமான நிகழ்வாகும். எங்கள் பிரார்த்தனைகள் சில நிம்மதியை அளிக்கட்டும்.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Fears that 80 soldiers may have died in a military plane crash in Colombia