திமுகவினர் எனக்கு பர்ஸனலா நன்றி சொல்லுறாங்க! ஆனால் வெளிய வந்து... நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேட்டி!
DMK BJP Nirmala Sitharaman caste census
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ஜிஎஸ்டி, திமுக அரசு தொடர்பாக சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
அதில், "ஜிஎஸ்டி என்பது பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் விதிக்கும் வரி அல்ல. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் சேர்ந்து உருவாக்கிய கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி விதிக்கப்படுகிறது.
நடுத்தர மக்கள் பயன்பாட்டு பொருட்களுக்கு அதிக வரி எனக் கூறுவது தவறானது; ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விகிதம் குறைந்துள்ளது," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றும் தமிழ்நாட்டில் சாதி அடையாளங்களுடன் தெருப் பெயர்கள் உள்ளன. இப்படியிருக்க, திமுக சமத்துவம் பேசுவது வெறும் மொழிபோலியே” என விமர்சித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், "அதை திமுக வெற்றியாகச் சொல்லுவது அரசியல் லாப நோக்கம்தான். இதனை அவர்கள் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படக்கூடாது," என்றார்.
மேலும், நிதி ஒதுக்கீடுகளில் தங்களை மறைமுகமாக பாராட்டிவிட்டு, வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிப்பது மரபாகிவிட்டதென்றும், “நீதிமன்றம் கண்டித்த பிறகே அமைச்சர்களை நீக்கும் நிலை எந்தக் கூட்டணிக்கு வந்தது என மக்கள் கேட்க வேண்டும்,” என்றும் சுட்டிக்காட்டினார்.
"குடிநீரில் மனிதக் கழிவு கலக்கும் அவலம் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற புகழில் கூட இத்தகைய கொடுமை ஏன்?" என்றும் கேள்வியெழுப்பினார்.
English Summary
DMK BJP Nirmala Sitharaman caste census