திமுக வின் சொம்புகள் திட்டமிட்டு பரப்பும் பொய்ச் செய்தி! அலறல், கதறல், அசிங்கம்... கொந்தளிக்கும் தவெக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


கடந்த 1999 பாராளுமன்ற தேர்தலிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது.. அதில் அவர்கள் குறிப்பிட்டது தமிழ் நாட்டின் நலனுக்காக CMP ( Common Minimum Program) முன்னிறுத்தி தான் எங்கள் கூட்டணி என்று.

அதேபோல வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள தவெக நிர்வாகி லயோலா மணி, "ஊழலாட்சி - குடும்ப அரசியல் செய்யும் திமுக வை தோற்கடிக்க தவெக தலைமையில் தான் கூட்டணி என வெற்றித் தலைவர் தளபதி அவர்கள் அறிவித்து பல மாதங்களாகி விட்டது. சித்தாந்த எதிரி - கொள்கை எதிரி பா.ஜ.க என தவெக விக்கிரவாண்டி மாநாட்டிலேயே பகிரங்கமாக அறிவித்துவிட்டார். 

இதற்கு பின்பும் பா.ஜ.க தலைவர்கள் தவெக உடன் கூட்டணி வைக்க ஏங்குகிறார்கள். திமுகவின் சொம்புகள் திட்டமிட்டு பொய்யாக அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பொய்ச் செய்தியை பரப்புகின்றனர்  . நாளும்,பொழுதும் வெற்றித் தலைவர் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் பெருகும்  மகத்தான மக்கள் ஆதரவு தான் இந்த அலறலுக்கும், கதறலுக்கும் ஒரே காரணம். இப்படி பொய்ச் செய்தி பரப்பும் செயல் அரசியல் அசிங்கம்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK BJP ADMK TVK Vijay NTK 2026 election alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->