வாட்ச் வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016..! கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது..! உண்மையை போட்டு உடைத்த திமுக...!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து இணையத்தில் ஒரு பதிவு வைரலானது. அதில் தான் ஏழை விவசாயி என சொல்லும் அண்ணாமலை 3.48 லட்சம் ரூபாய்க்கு கடிகாரத்தை அணிந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணாமலை அணிந்திருந்த வாட்ச் மற்றும் அது குறித்தான தகவல் அடங்கிய பதிவு இணையத்தில் வைரலானது. 

இதற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி "ஆடு விற்ற காசில் வாங்கிய வாட்சா..? வாங்கியதற்கான ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிட முடியுமா..? என சவால் விடுத்திருந்தார். அதுக்கு அண்ணாமலை "வாட்ச் வாங்கி ரசீது வெளியிட நான் தயார், திமுக நிர்வாகிகள் சொத்து விவரங்கள் வெளியிட தயாராக என கேள்வி எழுப்பினார். இவ்வாறு மாறி மாறி பதில் கேள்விகள் எழுப்பிய நிலையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்ல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!" என பரபரப்பான தகவலை பதிவிட்டுள்ளார். திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக தரப்பினர் பதில் கூற முடியாமல் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk ask Why Annamalai didnt say about rafeal watch in affidavit


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->