நெருங்கும் மக்களவைத் தேர்தல் - திமுக - விசிக இன்று பேச்சுவார்த்தை.! யாருக்கு எந்த தொகுதி? - Seithipunal
Seithipunal


வருகிற 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் மூன்று மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and vck constituency for parliment election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->