நகர்ப்புற தேர்தல் : திமுக-காங்கிரஸ் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து கே எஸ் அழகிரி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. ஆகையால், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நகர்ப்புற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்ட இடங்களை தர பரிசீலிப்பதாக திமுக உறுதி அளித்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and congress alliance meeting in anna arivalayam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->