நிறைந்த அமாவாசை நாளில் நேர்காணல்.. இன்றே கோதாவில் குதிக்கும் திராவிட கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, இயூமுலீ, தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டணி பேச்சுக்கு பிறகு திமுக 21 தொகுதியிலும், காங்கிரஸ் 10 தொகுதியிலும், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதியிலும், கொமதேக, இயூமுலீ மதிமுக தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதன்படி கூட்டணி கட்சிக்கு 19 இடங்களை ஒதுக்கிய திமுக நேரடியாக 21 தொகுதிகளில் வேட்பாளர்களை‌ நிறுத்துகிறது‌.

இதற்கான விருப்பமனுக்களை கடந்த மாதமே திமுகவினர் பெற்றுக் கொண்ட நிலை அதனை‌ சமர்பித்தனர். இத்தகைய சூழலில் நிறைந்த அமாவாசை நாளான இன்று திமுக விருப்பமனு சமர்பித்தவர்களிடம் நேர்காணலை முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் நடத்துகிறார்.

அதே போன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று தொடங்கும் நேர்காணல் நாளையும் நடைபெறுகிறது. இன்று 20 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை 20 மக்களவை தொகுதிகளுக்கும்‌ என பிரிக்கப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான அசல் ரசீதுடன் வர வேண்டும் என அதிமுக‌ தலைமை அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Admk starts loksabha candidate selection


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->