மதுரை அரசியல் சதுரங்கம்: முக அழகிரியின் ஆதரவாளர்கள் 'இலை'க்குத் தாவியது ஏன்?! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


மதுரை அரசியலின் 'முடிசூடா மன்னனாக' ஒருகாலத்தில் வலம் வந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது தங்கள் அரசியல் வாழ்வைத் தற்காத்துக்கொள்ள அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

2014-ல் கருணாநிதியால் அழகிரி நீக்கப்பட்டபோது தொடங்கிய இந்த அரசியல் வனவாசம், 2026 தேர்தலிலும் முடிவுக்கு வராததால், இன்று மதுரையில் ஒரு பெரும் இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பொறுமை அழகிரி ஆதரவாளர்கள்!
கடந்த 10 ஆண்டுகளாக திமுக தலைமை காட்டி வரும் மௌனமே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தும், மன்னிப்புக் கடிதம் கொடுத்தும் அழகிரி ஆதரவாளர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், "இனி பொறுத்தால் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்" என உணர்ந்த நிர்வாகிகள், அழகிரியின் 'மறைமுக' அனுமதியுடன் அதிமுக பக்கம் நகரத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக விரித்துள்ள வலை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), மதுரையில் திமுகவின் பலத்தைக் குறைக்க அழகிரியின் பழைய தளபதிகளைத் தன்பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளார்.

பி.எம்.மன்னன் (முன்னாள் துணை மேயர்): கடந்த பிப்ரவரி 17-ல் அதிமுகவில் இணைந்து, "மதுரையின் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்" எனச் சவால் விடுத்துள்ளார்.

மேலும் இன்று எஸ்.ஆர்.கோபி 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய உள்ளார்.

 அதிருப்தியில் உள்ள திமுக கவுன்சிலர்கள் மற்றும் மண்டலத் தலைவர்களை வளைக்க அதிமுக தலைமை ஒரு ரகசியப் பட்டியலைத் தயார் செய்துள்ளது.

அழகிரி முகாமானது தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது:

அதில் ஒரு தரப்பு "அண்ணன் எங்களை விடுவித்துவிட்டார், இனி அதிமுகவில் இருந்து அரசியலைத் தொடர்வோம்" என்றும், மற்றும் ஒரு தரப்பு, "அண்ணனின் கண்ணசைவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டோம்; செல்பவர்கள் சுயநலவாதிகள்" என்று தெரிவிக்கின்றனர்.

அழகிரியின் நிலைப்பாடு: "என்னால் உங்களை மீண்டும் திமுகவில் சேர்க்க முடியவில்லை; உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளுங்கள்" என அழகிரி பச்சைக் கொடி காட்டியதே இந்த கட்சி தாவல் தீவிரமடையக் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மதுரை அரசியலில் அழகிரி என்ற தனிநபர் பிம்பம் இன்னும் நீடித்தாலும், அவரது அமைப்பு ரீதியான பலம் தற்போது அதிமுகவின் கரங்களை வலுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 2026 தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK ADMK MK Azhagiri madurai political issue


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->