கமலஹாசனோடு கைகோர்க்கும் விஜயகாந்த்?! மூன்றாவது அணிக்கு வாய்ப்பை வழங்குமா அதிமுக?!  - Seithipunal
Seithipunal


கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது போல், வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிமுக ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தொடர்ந்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் அதிமுக தரப்பில் 15 முதல் 20 சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக விரைவில் அதிமுக தங்களது உறுதியான முடிவை வெளியிட்டால், தனித்துப் போட்டியிடுவது குறித்து அறிவிப்பை வெளியிட்டு தங்கள் தேர்தல் பணிகளை தொடரலாம் என்பதால் என்ற முடிவில் உள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

மேலும், ஒரு திட்டமாக கமலஹாசனுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவாக்கலாம் என்ற எண்ணத்திலும் தேமுதிக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்திற்கு முன்னதாகவே கூட்டணியை இறுதி செய்து பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேமுதிக தற்போது காய் நகர்த்தி வருகிறது.

இதன் காரணமாகத்தான் அதிமுக கூட்டணியில் இடம் பெறலாமா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளதால், அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க போகிறீர்கள் என்ற பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை உடனே தொடங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK PLAN mnm alliance


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal