காங்கிரஸ் கேட்கும் இறுதி எண்ணிக்கை கொடுக்கலான கூட்டணி வேண்டாம்! நிர்வாகிகள் வலியுறுத்தலால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணியில், திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சவ்வு போல இழுத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்து  கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டமானது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கே எஸ் அழகிரி, " திமுக நம்மை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது என கண்ணீர் விட்டு பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளுக்கும் திமுக கொடுப்பதாக சொல்லும் தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவு வித்தியாசம் இருக்கிறது. நாம் திமுகவுடன் 110 தொகுதிகளில் கூட்டணி வைத்தோம் அது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தொகுதிகளை குறைத்துக்கொண்டே போட்டியிட்டு வருகிறோம். ஆனால் தற்போது அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் வாங்கி போட்டியிட்டோம் என்றால், அடுத்த முறை நாம் சென்று பேசுவதற்கு கூட இடம் தரமாட்டார்கள்" என்று கண்ணீர் மல்க பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் 41 தொகுதிகளுக்கு குறைவாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளக் கூடாது என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், திமுக கொடுப்பதாக கூறி இருக்கும் 27 தொகுதிகளில் நாம் போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்ற நிலையில், குறைந்தபட்சம் 30 தொகுதிகளுக்கு கீழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடக்கூடாது என இறுதிக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இறங்கி வந்துள்ளதாகவும், ஆதலால் 31 தொகுதிகளைக் திமுகவிடம் இறுதிக்கட்டமாக கேட்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Discuss between DMK and congress alliance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->