திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மாறுபாடு – மதிமுகவுக்கு சிக்கல்? வைகோவுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அரசியல் சூடேறி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொமதேக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தவாக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு போன்றோர் கூட இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதோடு தேமுதிக, பாமக கட்சிகளும் திமுக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலில்
காங்கிரசுக்கு – 25 இடங்கள்
விசிக – 6
மதிமுக – 6
சிபிஐ – 6
சிபிஎம் – 6
என தொகுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்த முறை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறார்கள். விசிக குறிப்பாக இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

2026 தேர்தலில் தவெக உள்ளிட்ட புதிய அணி களமிறங்குவதால், சிறிய கட்சிகளின் வாக்கு மொத்தமும் வெற்றி–தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2016 போல சில வாக்குகளால் ஏற்பட்ட ஆபத்தை திமுக மறுபடியும் சந்திக்கக் கூடாது என்பதே ஸ்டாலினின் முக்கியக் கணிப்பு.

இது தொடர்பாக திமுக ஒரு முக்கிய முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது:விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும்.அதற்கு பதிலாக மதிமுகவுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறைக்கப்படும்.

இதற்கான ஈடாக,மதிமுக தலைவர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கும் திட்டம்திமுக தலைமையால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் வைகோ இதனை ஏற்காவிட்டால்,மதிமுக கூட்டணிக்கு வெளியேற வழியனுப்பும் திட்டமும்திமுக கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய அதிருப்திகளின் பின்னணியில், மதிமுகவில் இருந்த மல்லை சத்யா ஏற்கனவே ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யத்துக்கும் (MNM) சில தொகுதிகளை வழங்க வேண்டிய நிலை.உதயசூரியன் சின்னம் / சொந்த சின்னம் விவகாரத்திற்கும் இடமளிக்க வேண்டிய தொகுதி மாற்றங்கள்.இதனால் சில தொகுதிகளை குறைத்து, கூட்டணியை சமநிலைப்படுத்த திமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திமுக கூட்டணி மிகப்பெரிய வடிவில் விரிவடைய போகிறது. ஆனால் அதே நேரத்தில்,யாருக்கு எவ்வளவு தொகுதி?யாரை சமாதானப்படுத்துவது?யாரை விட்டுவிடுவது?என்கிற சிக்கலான கணக்கில் திமுக தலைமை மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

அடுத்த சில வாரங்களுக்குள் இந்த தொகுதி பங்கீடு அரசியல் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கும் என்பது உறுதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Difference in seat sharing in DMK alliance problem for MDMK Jackpot for Vaiko Stalin decision


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->