என்ன ஸ்கெட்ச்சா! 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ ஒன்று போதும் என நினைத்து விட்டார்களா? - முதலமைச்சர் கேள்வி - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, கடந்த 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும், 2027ம் ஆண்டுக்குள் 2 -டாம் கட்ட பணிகள் முடிவடையும்" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாதிரி வீடியோ வெளியானது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின்:

அதில் அவர் குறிப்பிட்டதாவது," மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.

மேலும், 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did you think this AIIMS video was enough for the 2026 electionsChief Minister questions


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->