“சர்கார்’ படத்தின் பேனரை கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்ததா?” – புஸ்ஸி ஆனந்துக்கு அதிமுக கடும் பதிலடி! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ‘சர்கார்’ திரைப்படத்தின் பேனர்களை அதிமுகவினர் கிழிக்காமல் இருந்திருந்தால் 2021-ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு, அரசியல் ரீதியாக தேவையின்றி அதிமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் பேசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக வெளியிட்ட பதிலில், 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு மாற்றம் தேவை என்ற மக்களின் மனநிலையே எனக் கூறப்பட்டுள்ளது. அத்தேர்தலில் அதிமுக 33.3 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஐந்து ஆண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

‘சர்கார்’ திரைப்படத்தில் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி அதிமுகவினர் அப்போது எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டுள்ள அந்தக் கட்சி, ஜெயலலிதாவின் பெயரையும், அவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் தற்போது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

குறிப்பாக, ‘சர்கார்’ படத்தில் விமர்சிக்கப்பட்டதாக கூறப்படும் ‘அம்மா லேப்டாப்’ திட்டம் போன்றவற்றை இப்போது பயன்படுத்துவது குறித்து அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

மேலும், “பேனரை கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது” போன்ற கருத்துகளை இனி தியேட்டர் வாசலுடனும் சமூக வலைதளங்களுடனும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என புஸ்ஸி ஆனந்துக்கு அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதியில், ‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தில் தங்களுக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டுமே இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு தங்களால் இரண்டு நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது என்றும் கிண்டலாக அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் இந்த வார்த்தைப் போர், சட்டப்பேரவையில் திரைப்பட விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக மாறியிருப்பதை காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did the government fall because the banner of the movie Sarkar was torn AIADMK sharp retort to Pussi Anand


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->