முதலமைச்சரின் மகளிடமே கைவரிசை காட்டிய மர்மநபர்.! மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் வர்த்தக தளத்தில் பழைய பொருள் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, ரூபாய் 34 ஆயிரத்து இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, பழைய சோபா ஒன்றை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளார். இதனையடுத்து பழைய பொருட்களை விற்பனை செய்யும் இணையதள வர்த்தக தளத்தில் இது குறித்து விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த நபர் ஒருவர் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு, அந்த சோபாவை தான் வாங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹர்ஷிதா அந்த சோபாவை 34 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

அந்த நபர் ஹர்ஷிதாவின் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்ப உறுதி செய்வதற்காக கொஞ்சம் பணம் முதல் கட்டமாக அனுப்பி விட்டு, ஒரு கியூ ஆர் கோடை அனுப்பி அதனை ஸ்கேன் செய்து மீதமுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஹர்ஷிதாவிடம்  அந்த நபர் தெரிவித்துள்ளார்

ஹாஷிதாவும் அந்த கோடை ஸ்கேன் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பணம் போனதும் அந்த நபரிடம் ஹர்ஷிதா சொல்லி விவரம் கேட்டுள்ளார். அதற்க்கு அந்த நபர் ஒரு கியூஆர் கோடை அனுப்பி ஸ்கேன் செய்யும்படி ஹர்ஷிதாவிடம் தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஹர்ஷிதாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டவே அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா முதல்வர் இல்லத்துக்கு அருகே இருக்கும், டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi cm daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->