காவலாளி அஜித் குமார் இறப்பு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்...!
Death guard Ajith Kumar BJP state president Nainar Nagendran visited and expressed condolences
சிவகங்கை மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அஜித்குமார் இறப்பிற்கு ஆறுதல் தெரிவிக்க அவரின் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தமிழக பாஜக தலைவர் 'நயினார் நாகேந்திரன்' ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு நயினார் நாகேந்திரன் மனம் உருக ஆறுதல் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி, காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
English Summary
Death guard Ajith Kumar BJP state president Nainar Nagendran visited and expressed condolences