சிலிண்டர் தட்டுப்பாடு மக்களை சிரமம்படுத்துகிறது... உடனடி தீர்வு தேவை...! - கனிமொழி வலியுறுத்தல்
Cylinder Shortage Causes Hardship Public Immediate Solution Needed Kanimozhi Urges
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல் இந்த அச்சத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, இதேபோன்ற ஒரு சூழல் நிலவியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது மத்திய பாஜக அரசு எடுத்த முடிவுகள் தாமதமாகவும், போதிய அளவில் இல்லாமலும் இருந்ததால், அதன் பாதிப்புகளைச் சாதாரண மக்களே சுமக்க வேண்டியிருந்தது என்று அவர் விமர்சித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இந்த விநியோகத் தடையைத் தடுக்க முறையான மற்றும் பயனுள்ள தீர்வுகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Cylinder Shortage Causes Hardship Public Immediate Solution Needed Kanimozhi Urges