நீட் விவகாரம்.. ஆளுங்கட்சிக்கு ஐடியா கொடுத்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழக அரசு அனுப்பி தீர்மானத்தை ஆறு மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று ஆளுநர் மளிகை முன்பு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. நீட் விலக்கு மசோதாவில் குறைகள் இருப்பின் அரசு அதனை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தான் ஆக வேண்டும். மேலும், நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண வேண்டும் என தமிழக அரசிற்கு சிவி சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam says about neet issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->