பட்டமளிப்பு விழாவில் 03வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; அரசின் நிலைப்பாடு என்ன?; பெ.சண்முகம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


''மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?'' என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்திரசேகர், இந்நிகழ்ச்சி குறித்தான அறிவிப்பின்போதே,  ''தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட வேண்டும் என ராஜ்பவனில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதுவே பின்பற்றப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதன் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளதோடு, இது தொடர்பாக தான் பேசியுள்ள காணொளியையும் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPM Shanmugam asked what the governments stance was on the Tamil Thai vaazhthu greetings sung for the third time


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->