மத்திய அரசை கண்டித்து நாளை கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.!  - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நாளை சிபிஐ (எம்) தலைமை அலுவலகத்தில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான வரி விதிப்புகளை கைவிட வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்திட வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 

பொதுத்துறை நிறுவனங்களை, பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும்  முயற்சிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் இயக்கம் நடத்துவது என அகில இந்திய கட்சிகளின் அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக, சிபிஐ(எம்), சிபிஐ, காங்கிரஸ், திக, மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,  தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் முடிவின் அடிப்படையில்,  நாளை(20.9.2021) தமிழகம் முழுவதும்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில்,   கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM protest announce sep 20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->