மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் முறைகேடாகப் பதிவு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
congress Rahul Gandhi Election commission Voter List
பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்கு மோசடியில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான புள்ளிவிவரங்களை முன்வைத்து அவர் விளக்கம் அளித்தார்.
“கர்நாடகாவில் எங்கள் உள்கருத்துக் கணிப்பு 16 தொகுதிகள் வெல்லும் எனக் கூறியது. ஆனால் வென்றது ஒன்பது இடங்களில் மட்டுமே. தோல்வியடைந்த ஏழு தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 1,00,250 வாக்குகள் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஒரே முகவரியில் பலர் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஒரு வீட்டில் 50-60 பேர் இருப்பதாக பதிவு இருந்த நிலையில், உண்மையில் அங்கு ஒரு குடும்பமே வசித்து வந்தது. போலி முகவரிகள், செல்லாத அடையாளங்கள், போலி வாக்காளர்கள் போன்ற பல வழிகளால் மோசடி நடந்தது,” என்றார்.
மேலும், “அரியானா, மத்தியப் பிரதேச தேர்தல்களிலும் இவ்விதம் நேர்ந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றாக இருந்தும், முடிவுகள் மாறுபட்ட திசையில் பெரிய வேறுபாடுகளுடன் வந்தன,” என்றார்.
இதனிடையே, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 65 பேர் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
congress Rahul Gandhi Election commission Voter List