இந்தியாவுக்கு வரும் இஸ்ரேல் பிரதமர்! டிரம்பை சமாளிப்பது ஜுஜூபி.! மோடிக்கு நான் சொல்லித்தரேன்..இனி நம்பதான்! - Seithipunal
Seithipunal


பாலஸ்தீன பிரச்சினையைச் சூழ்ந்த சர்ச்சைகளால் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியா-அமெரிக்கா உறவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திக்க விரைவில் இந்தியா வருவதாக அறிவித்துள்ளார்.

“பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் எனக்கு மிகச் சிறந்த நண்பர்கள். டிரம்பை கையாள்வது குறித்து பிரதமர் மோடிக்கு சில தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்,” என நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா-இந்தியா உறவு “மிகவும் உறுதியானது” என்று அவர் புகழ்ந்ததோடு, இரு நாடுகளும் வரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த வார தொடக்கத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து இந்திய ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 25% சுங்கவரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த சுங்கவரி 50% ஆக உயர்ந்தது. பிரேசிலைத் தவிர்த்து, டிரம்பின் புதிய பட்டியலில் இது அதிகபட்ச சுங்கவரி விதிப்பாகும்.

இந்த நடவடிக்கையை “அநியாயமானதும், பொருத்தமற்றதும்” என்று இந்தியா கண்டித்துள்ளது. ஜவுளி, கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகள் இதனால் பாதிக்கப்படும் என மதிப்பிடப்படுகிறது.

பிரதமர் மோடி, “விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்கான விலை கொடுக்க நேர்ந்தாலும், அதைச் செய்யத் தயார்” என்று உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகு மீது கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு அவர் வருவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், இந்திய எதிர்க்கட்சிகள் மத்திய அரசு பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli Prime Minister coming to India Jujube is the one who will deal with Trump I wonot tell Modi now he has to believe


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->