பாஜகவின் அடிவருடியாக மாறி தமிழகத்துக்கு துரோகம் செய்யும் இபிஎஸ்!ஜெயிச்சிடலாம் நினைக்காதீங்க! அது நடக்காது! துரைமுருகன் கடும் குற்றச்சாட்டு!
EPS is betraying Tamil Nadu by becoming a BJP stooge Donot think you can win That wonot happen Durai Murugan makes a strong accusation
நாட்டின் ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் வாக்காளர் பட்டியல் மோசடியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “வாய்மூடி கள்ள மௌனம் காத்து மக்களுக்கு துரோகம் செய்கிறார்” என்று திமுக பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொய்களை பரப்பி ஆட்சியைப் பிடித்த பாஜக, ஆட்சித்திறனில் தோல்வியடைந்து, வெற்றி பெற முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தையே அழிக்க முயற்சிக்கிறது என கூறியுள்ளார். கடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், வெறும் 5 மாதங்களில் 41 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், இதுவே தேர்தல் முடிவை மாற்றியதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் வீடியோ பதிவுகளை 45 நாட்களில் அழித்து ஆதாரங்களை மறைத்திருப்பது தேர்தல் ஆணையம் பாஜக அரசின் “கைப்பாவையாக” மாறியதற்குச் சான்று என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
மேலும், பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) என்ற பெயரில் பாஜக ஆதரவற்ற லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த 36 லட்சம் பேர் உட்பட, ஏழைகள், சிறுபான்மையினர், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போலி வாக்காளர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
உச்சநீதிமன்றம் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை இரண்டையும் செல்லத்தக்க ஆவணமாக ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தேர்தல் ஆணையம் அதை புறக்கணித்திருப்பதை அவர் கண்டித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் இதே மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக எச்சரித்த துரைமுருகன், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, பிற மாநில மக்களை பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளதாகக் கூறினார். “இதுவே தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமையை அபகரிக்கும் செயல்” என அவர் கண்டித்தார்.
பாஜகவின் அடிமையாக மாறி, அதிமுகவையும் வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா EPS? இல்லையெனில், இந்த முறைகேடான SIR குறித்து ஏன் மௌனம் காக்கிறார்?” என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
“தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாதவர்கள் குறுக்கு வழி கனவு கண்டால் அது ஒருபோதும் நனவாகாது. முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
EPS is betraying Tamil Nadu by becoming a BJP stooge Donot think you can win That wonot happen Durai Murugan makes a strong accusation