சுடிதார் அணிந்து கணவருடன் உணவகத்திற்கு வந்த பெண் - உள்ளே விட மறுத்ததால் நேர்ந்த அவலம்.!! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய முறையில் உடை அணிந்து கணவருடன் சென்ற பெண் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே இயங்கி வரும் ஒரு உணவகத்தில் இருந்து வீடியோவை நேரடியாக ஒளிபரப்பிய தம்பதியினர், ஹோட்டல் நிர்வாகம் தங்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர்.

அதாவது, அந்தப் பெண் சுடிதார் மற்றும் சால்வையும், அவரது கணவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த அந்த உடை பொருத்தமற்றது என்றும், உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனம் செய்த இந்த செயல் இந்திய கலாச்சாரத்தையும் ஒரு இந்தியப் பெண்ணையும் அவமதித்ததாகவும், அதே நேரத்தில் குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதையடுத்து பலரும் தங்கள் கண்டனத்தை  பதிவு செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi hotel refuse women for wear chudithar


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->