கன்னியாகுமரி : போலி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது.!!
3 peoples arrested for duplicate appointment order
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, நாகர்கோவில், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த திண்டிவனம் ஐந்தாவது குருக்குவீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார், திண்டிவனம், சஞ்சிவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில் மற்றும் திண்டிவனம், ஆசிரியர்நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 peoples arrested for duplicate appointment order