தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி சொத்துகளை மறைத்த பாஜக தலைவர்? காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு; சூடு பிடிக்கும் தேர்தல் களம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் 05 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 09ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறள்ளது. 

அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ரூ.200 கோடி மதிப்புள்ள பங்களாவை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவிக்கத் தவறிவிட்டுள்ளார் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். அந்த பிரமாணப் பத்திரத்தின்படி, சந்திரசேகர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.93 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், பிரமாணப் பத்திரத்தில், பெங்களூருவில் சுயமாகச் சம்பாதித்த சொத்து உட்பட, அவருடைய அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 15.07 கோடிக்கும் அதிகமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ.107 கோடிக்கும் அதிகமான கடன்களும், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கோடி கடன் இருப்பதும் அதில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, அவருடைய வருமானமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றான கோரமங்கலாவில் 1.07 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 49,000 சதுர அடி பங்களாவை சந்திரசேகர் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று கேரள காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த பகுதியில் நிலவும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், அந்த நிலத்தின் மதிப்பு தற்போது சுமார் 200 கோடி ரூபாயாக இருக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், சந்திரசேகரின் 2024-ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்திலும் அவரது வசிப்பிடமாக இதே முகவரி குறிப்பிடப்பட்டதாகவும், இதே முகவரியில் அவர் சொத்துக்கான வரி செலுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. மாநில அரசியலில் இவ்விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாஜகவோ, ராஜீவ் சந்திரசேகரோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை.  ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடும் நேமம் தொகுதியில் சிபிஐ(எம்) தலைவரும் மாநில கல்வி அமைச்சருமான வி. சிவங்குட்டி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். சபரிநாதன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Party alleges that BJP leader Rajeev Chandrasekhar concealed assets worth 200 crore in his election affidavit


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->