வெடித்தது அடுத்த சர்ச்சை.. "காங்கிரஸ் ஆட்சிக்கு வராது"… திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


புதுக்கேட்டை மாவட்டம் ராஜா வீதியில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். விழாவை சிறப்பித்த திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தற்போது, நடந்து வரும் பிரச்சனையில், தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி விரைவில் தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதாபிமான அடிப்படையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிஐடியு உள்பட தொழிற்சங்கங்கள் பங்கேற்றதால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வராது. தொழிலாளர்களின் பிரச்சனை என்பது வேறு அரசியல் கூட்டணி என்பது வேறு.

கடந்த 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி இறந்தபோது அனுதாப ஆலையால் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தது. பின்னர் காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். அப்போது பிரதானமாக எதிர்க்கட்சி தலைவராக உட்கார வேண்டியது நான் தான். அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை ஜெயலலிதா அவர் பக்கம் இழுத்துக் கொண்டார்.

கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கும் கீழ் குறைவான இடங்களை பெற்றுக் கொண்டு ஒரு கட்சி இருக்கும்போது, கட்சியின் நிலை தேக்கத்தில் இருக்கத்தான் செய்யும். இந்த நிலை காங்கிரசுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அதிமுகவை விட்டு பாஜக தனியாக தேர்தலை சந்தித்து வாக்கு சதவீதத்தை காட்டுவதற்கு முயற்சி செய்கிறது. அது அவர்களது கட்சி வளர்ச்சிக்காக செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை. அதற்கான வளர்ச்சியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அதனால் நல்ல கூட்டணியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது" என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியை நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது திருநாவுக்கரசர் அவர் பங்கிற்கு ஒரு குண்டை போட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress mp Thirunavukarasar Congress will not come to power


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->