திமுகவுக்கு எதிராக திரும்பிய திருமாவளவன்? கொந்தளிக்கும் கூட்டணி கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாடுமுழுவதும் மக்களை திரட்டி இந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தம் கடந்த 10ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசிதழில் வெளியிட்டது. 

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கைகளை திட்டமிட எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி டெல்லியில் நேற்று கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்த்த நிலையில், திமுக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

திமுக கலந்துகொள்ளதற்கு பல காரணம் கூறப்பட்டநிலையில், திமுக எம்பி டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கே.எஸ் அழகிரி கூறிய பின்னர், காங்கிரஸ் கூட்டத்தில் திமுக எப்படிப் பங்கேற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரடியாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறினார். 

திமுகவினர் கலந்துகொள்ளாத கூட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது கூட்டணி தர்மமா? கே.எஸ்அழகிரிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress meeting dmk not participate participate dmk is explanation


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->