எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தியுள்ளனர் - பிரியங்கா காந்தி ஆவேசம்! - Seithipunal
Seithipunal


அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதன் காரணமாக அவரின் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதனை கண்டித்து டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "மோடி ராகுல் காந்தியின் குரலை நசுக்க பார்க்கிறார். அவரை சிறையில் தள்ளப் பார்க்கிறார். உங்களால் அவ்வளவு தான் செய்ய முடியும். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் என் சகோதரர் அல்ல.

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது சகாக்களும் பாஜக தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தியுள்ளனர். 

ராம ராஜ்ஜியம் நடத்துகிறோம் என சொல்ல கூடிய இவர்கள் கௌரவர்களாகவே நடந்து கொள்கிறார்கள்" என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress General Secretary Priyanka Gandhi Vadra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->