காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கடத்தல், திமுகவினர் கைது.. கூட்டணிக்குள் குழப்பம்.! - Seithipunal
Seithipunal


நடந்து முடித்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 20 ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் இடங்களில் திமுகவுக்கு 10 இடங்களும், காங்கிரஸ் 1 இடமும் என திமுக கூட்டணிக்கு மொத்தம் 11 இடம் கிடைத்தன, அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடந்த ஒன்றியக் குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த 17-வது வார்டு ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயம் என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து  திமுகவினர் அவரை காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதன் பின் 19 கவுன்சிலர்களைக் கொண்டு தேர்தல் மறைமுக தேர்தல் நடந்தது. அதில், ஒரு வாக்கு செல்லாதது என்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு  தலா 9 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து, குலுக்கல் முறையில் அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மறைமுக தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின் தேர்தலில் பங்கேற்க விடாமல் தன்னை திமுகவினர் தன்னை கடத்திச் சென்றுவிட்டதாக அன்னவாசல் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன், மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் எம்.செந்தில்குமார், நிர்வாகிகள் ராப்பூசல் கருப்பையா, கொங்கினிப்பட்டி பாலு, கருப்பப்பட்டி கணேசன் உள்ளிட்ட 5 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள திமுகவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress councillor kidnap by dmk paraty members


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal