கேட்காமலே கொடுக்கும் தளபதி...! - விஜயை போற்றிய செங்கோட்டையன்
commander who gives without even being asked Sengottaiyan praised Vijay
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், உணர்ச்சிப்பூர்வமான உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்,வழி தெரியாமல் நின்ற காலத்தில் எனக்கு திசை காட்டியவர் விஜய். என் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவருக்காகவே” எனக் கூறி கண்கலங்கினார்.

மேலும்,“தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொல்லியுள்ளார்.
இறைவனிடம் கையேந்தினால் அவர் ‘இல்லை’ என்று சொல்ல மாட்டார். கேட்டதை அருள்பவனே கிருஷ்ணன் என்று இந்து மதம் போற்றுகிறது” என ஆன்மீக உவமைகளுடன் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து,“ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் தலைவர் கேட்டதே இல்லாமல் தோன்றி உதவியவர்.
கேட்காமலேயே கொடுக்கக்கூடியவர் தான் நம்முடைய தளபதி. தமிழக வெற்றிக்கழகத்திற்கு இப்படியொரு ‘வெற்றி தளபதி’ கிடைத்திருப்பது பெரும் வரம்” என்று கூறி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார்.
English Summary
commander who gives without even being asked Sengottaiyan praised Vijay