பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள 10 அடுக்கடுக்கான கேள்விகள்!
CM Stalin’s When Will it Come Challenge to PM Modi A List of 10 Grievances
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மத்திய பாஜக அரசு இழைத்த துரோகங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ள முக்கியக் கேள்விகள்:
நிதி நிலுவை: தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய ₹3,458 கோடி சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) கல்வி நிதி மற்றும் பேரிடர் நிவாரண நிதி எப்போது வரும்?
திட்டத் தாமதம்: 10 ஆண்டுகளாக 'இன்ச் இன்ச்' ஆகக் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் (AIIMS) எனும் 'எட்டாவது உலக அதிசயம்' எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?
உரிமைப் போர்: தொகுதி மறுவரையறையில் (Delimitation) தமிழகத்தின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழியும், ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையான நீட் (NEET) விலக்கும் எப்போது அமலுக்கு வரும்?
உள்கட்டமைப்பு: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் மற்றும் ஓசூர் விமான நிலையத்திற்கான ஒப்புதல்கள் எப்போது கிடைக்கும்?
அரசியல் அராஜகம்: பாஜகவின் முகவர்போலச் செயல்படும் ஆளுநரின் அராஜகப் போக்கு எப்போது முடிவுக்கு வரும்?
மொழி மற்றும் பண்பாடு: தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடும், கீழடி அகழாய்வு அறிக்கையும் எப்போது வெளிவரும்?
"தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் அவர்களே..." எனத் தனது பதிவைத் தொடங்கிய முதல்வர், தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் செய்து வரும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு இந்த முறையும் தோல்வியைத் தான் பரிசாகத் தரும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin’s When Will it Come Challenge to PM Modi A List of 10 Grievances