எதிர்கட்சிகளின் விமர்சனங்களை விட பொதுமக்களின் பாராட்டே முக்கியம் - முதல்வர் ஸ்டாலின் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் விட்டு விட்டு பெய்யும் தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை, திரு.வி.க.நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிவ இளங்கோ சாலையில், மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கையில், "அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எதிர்கட்சிகளின் விமர்சனங்களை விட பொதுமக்களின் பாராட்டுகள் முக்கியம்" என்று, மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Say About Heavy Rain Fall 112022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->