#Breaking : சொன்னிங்களே., செஞ்சீங்களா.? பதிலுக்கு பதில்., கேள்விக்கு கேள்வி.! சற்றுமுன் முக ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


கடந்த 13ஆம் தேதி,  தமிழக அரசு சட்டசபையில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், மறுநாள் (14 ஆம் தேதி) தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அவை தொடங்கியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினராக ஆர் பி உதயகுமார் கேள்வி ஒன்றை எழுப்பினார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இனியாவது உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு க ஸ்டாலின், "அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் தருவதாக கூறினீர்களே, செய்தீர்களா? மோனோ இரயில் கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே, கொண்டு வந்தீர்களா? என்று பதில் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காலத்திலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். விவசாய பயிர்க் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்வதில் பல சிக்கல்கள், குறைகள் இருப்பதால் அவற்றை சரி செய்வோம் என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது பதிலில் பதில் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin say about dmk manifesto


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->