அறப்போர் இயக்கம் அடித்த அடியில் நடு ராத்திரியில் தெருவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி அறப்போர் இயக்கம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், மில்லிங் செய்யாமல் சாலை பணி நடந்துவருவதை சுட்டிக்காட்டி தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தது.

இந்த செய்தி முதல்வர் காதுக்கு செல்லவே, உடனடியாக அன்று இரவே சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

மேலும், அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவில், "சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin order for road milling


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->