போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலையின் எதிரொலி; மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள தீவிரவாத கும்பல்..!
A terrorist gang has threatened to kill a model for allegedly informing on the murder of a drug lord
மெக்சிகோ நாட்டின் போதைப்பொருள் கும்பலின் தலைவனான நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ், கடந்த 22-ஆம் தேதியன்று ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒரு பெண்ணை ரகசியமாக பின்தொடர்ந்து சென்ற பாதுகாப்பு படையினர், டாபல்பா பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அவர் உயிரிழந்தார்.
இரு தரப்பினருக்கும் இஅடையில் நடந்த மோதலில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு தங்களின் தலைவன் கொல்லப்பட்டதற்கு மரியா ஜூலிசா எனும் சமூக வலைதள மாடல் அழகி தான் காரணம் என்று தீவிரவாத கும்பல், தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி, ஜாபோபன் நகரில் உள்ள ஒரு பாலத்தில் குறித்த தீவிரத்தை போதை கும்பலால் வைக்கப்பட்ட பேனரில், மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மாடல் அழகி மரியா, ‘இந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இராணுவத் தரப்பில் இருந்து, ஒரு ரகசிய நபர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த வேட்டை நடந்ததாக கூறியுள்ளனர். இருப்பினும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கருதும் மரியா, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
A terrorist gang has threatened to kill a model for allegedly informing on the murder of a drug lord