19-வது ஐ.பி.எல் தொடர்; வரும் மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது; தமிழகத்தில் போட்டிகள் நடக்குமா..?
The 19th IPL season starts on March 28th
19-வது ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 02 நாட்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு, மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிக்கான அட்டவணை இந்நேரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய நிலையில், தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட 05 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிடலாம் என பிசிசிஐ காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அணி உரிமையாளர்கள் பகுதி நேர அட்டவணையாவது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழகம், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பிசிசிஐ காத்திருக்குமா? அல்லது பகுதி நேர போட்டி அட்டவணை வெளியிடப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.
English Summary
The 19th IPL season starts on March 28th