என்னதான் கதறினாலும் கருணாநிதி புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - முக ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை  எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் கருணாநிதிக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.

அண்ணா மறைந்தபிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு திமுக சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது கருணாநிதியின் வழக்கம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் இதனை கருணாநிதி கடைப்பிடித்தார்.

அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், கருணாநிதி நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கரோனா கால நடைமுறைகள் காரணமாக நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது.

கருணாநிதியால் ‘அண்ணா சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையில் பெரியார் - அண்ணா ஆகிய இருவரின் சிலைகளும் அமைந்துள்ள பகுதியில், கருணாநிதிக்கு பெரியார் - அண்ணா சிலைகளுக்கு நடுவே சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அந்தத் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, கருணாநிதி நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.  

திமுக தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெறும் பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கட்சி முன்னணியினரும், தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க இருப்பதை சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டக் கட்சிச் செயலாளர்கள் இணைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

கருணாநிதி திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கட்சியினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம். இனிமேல் சிலை அமையவிருக்கும் ஊர்களில், கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்திடலாம்.

தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் - மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கருணாநிதி புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும்" என்று அந்த கடிதத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin letter to dmk members aug 4


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->