மெரினா ஏர் ஷோ நினைவிருக்கா? இங்கே உள்ள விளம்பர அரசு... அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொடுப்பதா? ஜெயக்குமார் கண்டனம்!
Chinnaswamy stadium RCB DMK MK Stalin ADMK Jayakumar
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அரசுகளின் விளம்பரங்களுக்கு அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொடுப்பதா?
இங்கே உள்ள விளம்பர அரசு!
மெரினா ஏர் ஷோவில் விளம்பர மாடல் நாயகனுக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டும் குளிரூட்டப்பட்ட அறை அமைத்து விட்டு மக்களுக்கு குடிநீர் வசதி கூட ஏற்படுத்தாமல் ஐந்து உயிர்களை கண்மூடித்தனமாக காவு வாங்கியது!
நேற்று தான் ஐபிஎல் போட்டி முடிந்தது!
இன்றே அவசர கதியில் பாராட்டு விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?
ஒருபுறம் உயிரிழப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதும் பாராட்டு விழா தொடர்ந்துள்ளது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என செய்திகள் வருகின்றன.
11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு அம்மாநில அரசே முழு பொறுப்பு!
அடுத்த மாநிலமாக இருந்தாலும் உயிரிழந்துள்ளது சாமானிய-நடுத்தர மக்கள் என்பது தான் வேதனையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chinnaswamy stadium RCB DMK MK Stalin ADMK Jayakumar