விவசாயிகள் முகத்தில் புன்னகை...! நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தினார் முதல்வர் விஜய்...!
chief Minister Vijay increased incentive paddy and sugarcane
விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய அவர், விவசாயிகளின் நலனையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சன்ன ரக நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.289 ஆகவும், பொதுரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து விவசாயிகளுக்கு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 வழங்கப்படுகிறது. இதனுடன் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.
இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
நெல்லுக்கான ஊக்கத்தொகையில் ரூ.150 வரை உயர்வு வழங்கப்படுவது இதுவரை இல்லாத அளவிலான நடவடிக்கை என்றும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும் வகையில் வழங்கப்படுவதும் முக்கியமான முன்னெடுப்பு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் உழைப்புக்கு உரிய மதிப்பையும் வருமானத்தையும் உறுதி செய்வதே அரசின் நோக்கம் என தெரிவித்த அவர், விவசாயிகளை எந்த சூழலிலும் கைவிடாமல் அவர்களுக்கு உறுதுணையாக அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.
English Summary
chief Minister Vijay increased incentive paddy and sugarcane