ஜோ பைடனின் ஆரோக்கியத்தில் கவலை...! புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பது குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜோ பைடனுக்கு விதைப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கடந்த மே மாதத்தில் பொதுவெளிக்கு வந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலேயே அவர் இந்த உடல்நலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகின.உடல்நலப் பாதிப்பு காரணமாக அப்போது அவரது பணிகளில் சிலவற்றை துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரீஸ் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், கடந்த மே மாதத்தில் தனது உடல்நிலை குறித்து ஜோ பைடன் வெளிப்படையாக தகவல் வெளியிட்டார்.

அவருக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஜோ பைடனின் உடல்நிலை தற்போது மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.

தந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை காண்பது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடினமான காலகட்டத்தில் தந்தைக்கு தேவையான ஆதரவையும் அன்பையும் குடும்பத்தினர் வழங்கி வருவதாகவும் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Concerns over Joe Biden health Information released that his cancer worsened


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->