ஆடு மேய்க்கச் சென்ற கணவன் பிணமாக மீட்பு...! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் பிளான்...! இருவரும் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும் அவரது உறவினரும் சேர்ந்து கொலை செய்து, உடலை தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மனைவி உள்பட 2 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு கவாடே (40).

ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த இவரது மனைவி பங்காரி கவாடே.இந்த நிலையில் பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறி, இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக தெரிகிறது.

மனைவிக்கும் ராம ராணாவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து ரகுவுக்கு தெரியவந்ததும், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் தங்களது தொடர்பை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ரகு உயிருடன் இருக்கும் வரை தங்களது தொடர்புக்கு இடையூறு ஏற்படும் என கருதிய பங்காரியும், ராம ராணாவும் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.அதன்படி, சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து ரகுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவரது உடலை அருகில் இருந்த தோட்டத்திற்கு எடுத்துச் சென்று, குழி தோண்டி புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கணவர் காணாமல் போனதை மறைக்க பங்காரி, ரகு ஆடு மேய்க்கும் பணிக்காக வெளியூருக்குச் சென்றிருப்பதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

ஆனால் பல நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து ரகுவின் அண்ணன் லகமன்னா, சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரைத் தொடர்ந்து காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக பங்காரியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ரகுவை ராம ராணாவுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை தோட்டத்தில் புதைத்ததாக பங்காரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ரகுவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் காவலர்களிடம் அடையாளம் காட்டினர்.அதன்பேரில் சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற காவலர்கள், அங்கு புதைக்கப்பட்டிருந்த ரகுவின் உடலை தோண்டி எடுத்தனர்.

பின்னர் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக சிக்கோடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கள்ளத்தொடர்பின் பின்னணியில் கணவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சுமார் 6 மாதங்கள் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband found dead after going to herd goats master plan hatched by wife and the murderer How did they both get caught


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->