டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்தித்த முதல்வர் விஜய்..!
Chief Minister Joseph Vijay met President Droupadi Murmu and Vice President Radhakrishnan in Delhi
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்தார்.
கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், மே 27-ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (ஜூன் 11) நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக 02-வது முறையாக 03 நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்-ஷா உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அதனை பின்னர், புதுடெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசினார்.
English Summary
Chief Minister Joseph Vijay met President Droupadi Murmu and Vice President Radhakrishnan in Delhi