கோவை, திருச்சியில் 11,12ம் தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர்... நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்!
Chief Minister conduct field inspections Coimbatore and Trichy 11th and 12th and also provide welfare assistance
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மதத்திலிருந்து மாவட்ட வாரியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் இவர், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்துகொள்கிறார்.

மேலும், சென்னையிலிருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.அடுத்ததாக மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
இதனையத்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
இதனிடையே, கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Chief Minister conduct field inspections Coimbatore and Trichy 11th and 12th and also provide welfare assistance