செட்டியார் சமூக மக்களுக்கு என்று தனிநலவாரியம் அமைக்க கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


செட்டியார்களுக்கு தனிநலவாரியம் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை கோரிக்கை வைத்துள்ளது.

திருச்சியில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநகர், புறநகர், ஒன்றிய உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆலோசகர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

இளைஞரணி தலைவர் மலேஸ்வரகுமார் வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் டாக்டர் ஏ.கே.புகழேந்தி சிறப்புரையாற்றினார். 

இந்த கூட்டத்தில் பேரவை மாநாட்டை பிரமாண்டமாக நடத்த வேண்டும். செட்டியார்களின் குலத்தொழில்களை அங்கீகாரம் செய்து தனி நலவாரியம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, ஏழை, எளியவர்களுக்கு அமரர் ஊர்தி, குளிர்சாதன பெட்டி வசதிகள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chettiyar community demand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->