'மாயா பஜார்' பட புகழ் திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


மாயா பஜார்' பட புகழ் திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் நினைவு தினம்!.

 திரைப்பட நடிகர்எஸ்.வி.ரங்கராவ் (சாமர்லா வெங்கட ரங்கா ராவ், ஜூலை 3, 1918 – ஜூலை 18, 1974) ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். 

 எஸ்.வி.ரங்கராவ் அவர்கள் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் பிறந்த இவர் சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார்.

 1957-ல் வெளியான 'மாயா பஜார்' படத்தில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ், இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகராக முத்திரை பதித்திருப்பார். ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒற்றை ஆளாக சாப்பிடும் அந்த, 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' என்ற பாடல் மறக்க இயலாது. தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013 இல் வெளியிட்டது.


 

இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் முன்னோடி திரு.மங்கள் பாண்டே அவர்கள் பிறந்ததினம்!.

 இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.

 1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைபிரிவு கலைக்கப்பட்டது.

பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

 மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maya Bazaar movie fame Mr SV Rangaraos remembrance day


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->